கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அமைந்து உள்ள பழமையான, அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோயிலில் ஆடி மாதம் 2ம் வெள்ளியை முன்னிட்டு இன்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்மன் பாடல்களை பாடி வழிபட்டனர்.