மாவட்டத்தில் டேக்வாண்டோ விளையாட்டு பயிற்றுநர் பணிக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரசாந்த் கூறியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பல்வேறு விளையாட்டுகளில் உயர்தர பயிற்சிக்கான வழிகளை உருவாக்கி வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு ஆணையம் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், டேக்வாண்டோ விளையாட்டில் வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு உயரிய நிலையிலான போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்யும் பொருட்டு ஸ்டார் விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் அகாடமி செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்திற்கான டேக்வாண்டோ பயிற்றுநர் (பதவி காலம் செயல் திறன் அடிப்படையில் 11 மாதங்கள் புதுப்பிக்கத்தக்கது) பணிக்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
இதற்கான நேர்முக தேர்வு வரும் 25ம் தேதி தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.