கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை தினம் வரை பொதுமக்கள் பார்வைக்காக வெள்ளி விழா திருவள்ளுவர் திருஉருவச்சிலை வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை 25 ஆண்டுகளை கடந்து, வெள்ளி விழா கண்டுள்ளது.
இதையொட்டி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளி விழா திருவள்ளுவர் திருஉருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பிரசாந்த் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தொவி மரியாதை செலுத்தினார். பொங்கல் பண்டிகை வரை பொதுமக்கள் பார்வைக்காக திருவள்ளுவர் சிலை காட்சிப்படுத்தப்பட உள்ளது. வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் வெள்ளி விழா உருவச்சிலையினை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் கந்தசாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.