கள்ளக்குறிச்சி: பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் திட்டம்

58பார்த்தது
கள்ளக்குறிச்சி: பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் திட்டம்
மாவட்டத்தில் மாபெரும் பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு: பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க, மாபெரும் பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

அதாவது தெரு, பூங்கா, நீர்நிலை, ஆற்றங்கரை, மத வழிபாட்டு தலம் மற்றும் பொது இடங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அனைவரும் இணைந்து அகற்றி துாய்மையான சுற்றுப்புறத்தை உருவாக்குவது திட்டத்தின் நோக்கம். மாதந்தோறும், 4வது சனிக்கிழமை நடக்கும் திட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சமூகத்துடன் கைகோர்த்து, சுற்றுச்சூழலுக்கு தகுதியான புதிய தொடக்கத்தை உருவாக்குவோம். 

சுத்தமான இடம் என்பது அழகியல் மட்டுமல்ல. அது ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நாம் வசிக்கும் இடத்தின் பெருமை பற்றியது. மாற்றத்தை ஏற்படுத்துவோம், மற்றவர்களையும் சுத்தம் செய்ய ஊக்குவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி