கள்ளக்குறிச்சி: 60ஆம் கல்யாணம் முடித்து வீடு திரும்பியவர் பலி

51பார்த்தது
கர்நாடக மாநிலம், பெங்களூரு, விஜயாநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 60; இவரது அறுபதாம் கல்யாணம் திருக்கடையூரில் நடந்தது. அதற்காக, கர்நாடக மாநில அரசு பஸ்சை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்தனர். திருமணம் முடிந்து, சொந்த ஊருக்கு திரும்பினர். நேற்று அதிகாலை 3: 00 மணிக்கு விருதாச்சலம்- வி. கூட்ரோடு, தேசிய நெடுஞ்சாலையில் நைனார்பாளையம் அருகே சென்றபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பஸ் மோதியது.


இதில் ரமேஷ் பலத்த காயமடைந்ததார். மேலும் பஸ்சில் பயணம் செய்த அவரது உறவினர்கள் 4 பேரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி