மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸ்: 12ம் தேதி புதுப்பிக்கலாம்

568பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸ்: 12ம் தேதி புதுப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான, இலவச பஸ் பாஸ் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் வரும் 12ம் தேதி நடக்கிறது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, இலவச பஸ் பாஸ் சிறப்பு முகாம் வரும் 12ம் தேதி காலை 10: 00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கிறது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் இரண்டுடன் நேரில் வந்து வரும் 2025 மார்ச் 31ம் தேதி வரையில் செல்லுபடியாகும் இலவச பஸ் பாஸ்சை புதுப்பித்து பயன்பெறலாம்.

மேலும், கை மற்றும் கால் பாதித்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் கல்வி நிலையம், பணி மற்றும் சுய தொழில் செய்வதற்கு வீட்டிலிருந்து தினசரி ஒரு முறை இலவசமாக சென்று வருவதற்கான பஸ் பாஸ் வழங்கும் சலுகை அட்டை புதுப்பித்து தரும் சிறப்பு முகாமும் நடக்கிறது.

எனவே, கை மற்றும் கால் பாதித்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் நான்குடன் நேரில் சென்று பஸ் பாசை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி