கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள , வண்டிபாளையம் கிராமத்தில் பாதை ஆக்கிரமிப்புகளை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் பாக்யராஜ் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்ராஜ் மற்றும் சாண்டோ ஆகியோரை நேற்று மது போதையில் வ. பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கிராம நிர்வாக அலுவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சந்தோஷ் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.