கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளின் தணிக்கைக்கு விருப்பமுள்ள தணிக்கையாளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அரசு துறைகள் அல்லது அரசு திட்டங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் குறைந்தபட்சம் தணிக்கையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் சுய உதவிக்குழுக்கள், வாழ்வாதார திட்ட நடவடிக்கைகள் போன்றவற்றில் நல்ல முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், தேவையான தகுதிகள், விதிமுறைகள் உட்பட கூடுதல் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு இணையதளத்தில் kallakurichi. nic. in காணலாம்.
விண்ணப்பதாரரர்கள் பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்களை இணை இயக் குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம், நிறைமதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்), கள்ளக்குறிச்சி மாவட்டம் - 606213 என்ற முகவரிக்கு வரும் ஆக. 3 அன்று அல்லது அதற்கு முன் சமர்பிக்க வேண்டும்.