கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் டி. எஸ். எம் கல்வியியல் கல்லுாரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் மனோகர்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி துணை முதல்வர் ராமு வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களான ரங்கபூபதி கல்வி நிறுவன நிர்வாகிகள் ஸ்ரீபதி, ஜெயா ஆகியோர் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
அப்துல்கலாமின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள் தேவி, பிரபாகரன், சிவராமன், அண்ணா கலியன், அர்ச்சனா வாழ்த்துரை வழங்கினர். செல்வம் நன்றி கூறினார்.