மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நவீன வாசிப்பாளர் கருவி

67பார்த்தது
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நவீன வாசிப்பாளர் கருவி
உயர்கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றத்திறனாளி மாணவ, மாணவிகள் நவீன வாசிப்பாளர் கருவி பெற விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு 14 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் இண்டர்நெட் ரேடியோ, யூஎஸ்பி பென்டிரைவர் மற்றும் எஸ்டி கார்டு சேமிக்கும் வசதி, தமிழ் உட்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி, நெட் வொர்க் இணைப்பு, குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி, பார்வையற்றவர்கள் பயன்படுத்த எளிதாக தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கொண்டுள்ளது.

இந்த நவீன வாசிப்பாளர் கருவி பெற மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி