சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் சேர்ந்தவர் முருகன், 43; இவர் அங்கு மரப்பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 4 ம் தேதி கடையின் முன்பு தனது பல்சர் பைக்கை நிறுத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு 7. 30 மணிக்கு வேலை முடிந்து மீண்டும் வந்து பார்த்தபோது பைக் திருடுபோனது தெரிந்தது.
இதனையடுத்து பைக்கில் பொருத்திருந்த ஜிபிஎஸ் கருவியை கொண்டு பின்தொடர்ந்து சென்றபோது 4 கிலோ மீட்டர் தொலைவில் பைக்கை தள்ளிக் கொண்டு சென்ற ஆசாமியை பிடித்து கீழ்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் துளுக்கவேலி காலணி சேர்ந்த ரஜினி மகன் நரேஷ், 23; என்பது தெரிந்தது. இதனையடுத்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து நரேைஷ கைது செய்தனர்.