நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய 'வெப் அப்ளிகேஷன்'

66பார்த்தது
நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய 'வெப் அப்ளிகேஷன்'
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெற வெப் அப்ளிகேஷன் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர், நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்களுக்கு அரசு துறைகளின் வாயிலாக நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.


இதனையொட்டி நலத்திட்டங்களை பெறுவதற்கு வெப் அப்ளிகேஷன் துவங்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓடிபி பெற மொபைல் எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி tnwidowwelfareboard. tn. gov. in என்ற இணையளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.


இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி