பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

65பார்த்தது
சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் அம்மன் சிலை சர்வ அலங்காரத்தில் கோவிலை சுற்றி வலம் வந்த பின்னர் வசந்த மண்டப ஊஞ்சலில் எழுந்தருளினார்.

அதன் பின்னர் பூசாரிகள், தாலாட்டு பாடல்களை பாடி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ ஆராதனைகளை நடத்தினர். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.
Job Suitcase

Jobs near you