உளுந்தூர்பேட்டை: பதிவு துறை பணியாளர் ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
உளுந்தூர்பேட்டை: பதிவு துறை பணியாளர் ஆர்ப்பாட்டம்
உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலத் தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மண்டலத் தலைவர் சதீஷ் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் பசுபதி துவக்கவுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் மணிராஜ் விளக்கவுரையாற்றினார். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் உதயசூரியன், முன்னாள் மாநில இணை செயலாளர் சடகோபன் கண்டன உரையாற்றினர். 

பேரையூர், கருங்கல், திருநாவலூர் சப்ரிஜிஸ்டர் அலுவலகங்களில் ஊழியர்களை தாக்கிய நபர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அரசியல் பிரமுகர்கள், கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் மூலம் மிரட்டும் போக்கினை கண்டித்தும், அச்சமின்றி பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் கொளஞ்சிவேலு, விஜயா, மாவட்ட தலைவர்கள் ரவி, காதர்அலி, மாநிலத் துணைத் தலைவர் செந்தில்முருகன், மாவட்டச் செயலாளர் சாமிதுரை, துணைத் தலைவர் வீரபத்திரன், நிர்வாகிகள் பூவழகன், வெங்கடேச பெருமாள், வேல்முருகன், முருகபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி