சங்கராபுரம் மணிநதிக்கரை அருகே அலமேலு மங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில்
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி
சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக வேத கோஷங்கள் முழுங்க பெருமாளுக்கு பால், தயிர்,
சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்
செய்யப்பட்டது. இதில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திராளாக பக்தர்கள்
கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம்
வழங்கப்பட்டது. இதேபோல் தேவபாண்டலம்
சவுந்தரவல்லி தாயார் சமேத பார்த்தசாரதி பெருமாள் கோவில், குளத்தூர் மற்றும் தியாகராஜபுரம் லட்சுமி நாராயண பெருமாள்
கோவில், காட்டுவன்னஞ்சூர் ராமபக்த
ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட சங்கராபுரம் பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி 3-வது
சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.