கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மயிலாம்பாறை பேருந்து நிலையத்தில் பழமையான ஆலமரம் இருந்தது. அதை சாலை பராமரிப்பு பணிக்காக நேற்று வெட்டினார்கள். ஆனால் மாரி என்பவர் மரத்தை வேறொரு இடத்தில் நட்டுதர வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனுவின் மூலம் கேட்டிருந்தார். நீதிமன்றம் ஏற்று வேறு இடத்தில் நடவும் உத்தரவிட்டது. ஆனால் நேற்று மரத்தை வேறொரு இடத்தில் மாற்றி நடுவதற்கு பதிலாக, வெட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.