கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமம் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த கண்ணன் வயது 45 என்பவர் சின்னசேலத்தில் உள்ள கால்நடை மருந்தாகம் பின்புறம் உள்ள பழைய கட்டிடத்தில் கதவைத் திறந்து மின் மோட்டாரை திருடிய போது கால்நடை உதவி மருத்துவர் பேபி உஷா கண்ணனை கையும் களவுமாக பிடித்துள்ளார். சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின் பேரில் கண்ணன் இன்று கைது செய்யப்பட்டார்.