கல்வராயன்மலை: அரசு பள்ளியில் சி. சி. டி. வி. , திருட்டு

66பார்த்தது
கல்வராயன்மலையில் உள்ள மட்டப்பாறை கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கு கடந்த 24ம் தேதி அரையாண்டு விடுமுறைக்காக விடுதி மற்றும் பள்ளி மூடப்பட்டது. விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் 2ம் தேதி காலை பள்ளியை வழக்கம்போல் திறந்தபோது, பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை பதிவை பதிவு செய்யும் 'பயோமெட்ரிக்' இயந்திரம் திருடு போயிருந்தது.


இதுகுறித்து தலைமை ஆசிரியர் தேன்மொழி அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி