கள்ளக்குறிச்சி: கட்சிக்கொடி கம்பங்கள் அகற்றம்

0பார்த்தது
கள்ளக்குறிச்சி: கட்சிக்கொடி கம்பங்கள் அகற்றம்
நெடுஞ்சாலையோரம் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுகவினர் சாலையோரம் வைத்திருந்த கொடிக் கம்பங்களை அகற்றிக் கொண்டனர். ஆனால், மீதமுள்ள கம்யூ, பாமக, விசிக கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தன. இதைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை நகராட்சிப் பகுதியில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை, நகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வீரசிவாஜி ஆகியோர் தலைமையில், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.

தொடர்புடைய செய்தி