மூங்கில்துறைபட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
பாஜக சார்பில் மோடி கிப்ட் பாக்ஸ் மற்றும் பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு
பாஜக ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் மதியழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 5 குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் மற்றும் நோயாளிகளுக்கு பிரட் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கினார்.