கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராம எல்லையில் ஆதி திராவிடர் மக்களுக்கு சொந்தமான 120 ஏக்கர் வேற்று சமூகத்தினர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்த நிலத்தை தற்போது சென்னை உயர் நீதிமன்றம் பஞ்சமி தரிசாக மாற்றி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை இப்பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க மக்கள் தேசம் கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.