காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேலிசித்திரமாக 10 தலை ராவணன் அவதாரத்தில் தலைவர் ராகுல்காந்தியை வரைந்து பாரதிய ஜனதா கட்சியினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஆஷாபிஜாகீர்உசேன், மாவட்ட துணை தலைவர் இதாயதுல்லா, பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், மாணவர் காங்கிரஸ் செயலாளர் ஆதில்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வக்கீல் முகமதுபாஷா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி