மத்திய பா. ஜ. , அரசை கண்டித்து, காங். , கட்சியினர் அல்வா கிண்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ், இளவரசன், இளையபெருமாள், ரகோத்தமன், இளைஞர் காங். , மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், கலைபிரிவு கலியமூர்த்தி, கஜாமொய்தீன், எஸ். சி. , பிரிவு பெரியசாமி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் தேவராஜ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய பா. ஜ. , அரசு மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோஷங்கள் எழுப்பி, அல்வா கிண்டி கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், ராஜி, பெரியசாமி, தனபால், ராஜேந்திரன், சற்குருநாதன், செல்வராஜ், மகிளா காங். , பவுனாம்பால், சுரேஷ், கணேசன், சோசியல் மீடியா மாவட்டத் தலைவர் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.