உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக சென்ற லாரியை மடக்கி சோதனை செய்ததில், அதில் அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த உளுந்தூர்பட்டை போலீசார், வழக்குப்பதிந்து கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கலர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் (19) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.