இருதரப்பினர் இடையே மோதல் போலீசார் வழக்கு பதிவு

74பார்த்தது
ரிஷிவந்தியம் அடுத்த எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர் மகன் வின்சென்ட், 21; டிரைவர். இவர் கடந்த 7ம் தேதி மேலப்பழங்கூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மீன் கொடுக்க சென்றுள்ளார். அங்கு வீட்டிற்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்த போது வின்சென்டுக்கும், மேலப்பழங்கூரை சேர்ந்த ஜெகநாதன் மகன் ஜெமினிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இது தொடர்பாக, வின்சென்ட் அளித்த புகாரின் பேரில், ஜெகநாதன் மகன் ஜெமினி, 23; சின்ராஜ் மகன் நலன்குமார், 20; ராஜி மகன் அகஸ்டின், அம்சவேல் மகன் சச்சின் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து, அதில், ஜெமினி, நலன்குமாரை கைது செய்தனர். அதேபோல், மற்றொரு தரப்பை சேர்ந்த நலன்குமார் அளித்த புகாரின் பேரில், அலெக்சாண்டர் மகன்கள் வின்சென்ட், தோம்னிக் ஆகிய இருவர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி