ரிஷிவந்தியம் அடுத்த சூ. ராயபுரத்தில் உள்ள புனித லுார்து அன்னை ஆலய வளாகத்தில் மேரி பிரதர்ஸ் அணி சார்பில் 39ஆம் ஆண்டு கபடி போட்டி நடந்தது. தண்டலை, கச்சிராயபாளையம், தெங்கியாநத்தம், மையனுார் உட்பட 36 அணிகள் போட்டியில் பங்கேற்றனர். ஊர் காரியஸ்தர்கள் போட்டியை தொடங்கி வைத்தனர். 36 அணிகளுக்கும் பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
போட்டியின் இறுதியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 20,024 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ. 16,024, மூன்றாமிடம் பெறும் அணிக்கு ரூ. 12,024, நான்காமிடம் பெறும் அணிக்கு ரூ. 8,024, ஆறுதல் மற்றும் சிறப்பு பரிசாக தலா ஒரு அணிக்கு ரூ. 5,024, ஆட்ட நாயகன் பரிசாக ரூ. 3,024 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் மேரி பிரதர்ஸ் அணியினர் செய்திருந்தனர்.