ரிஷிவந்தியம்: ஐ. ஜே. கே. , பிரமுகர் மீது தாக்குதல்

73பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த பெரியபகண்டையை சேர்ந்தவர் குப்புசாமி மகன் நடராஜன், 33; ஐ. ஜே. கே. , பிரமுகர். நேற்று முன்தினம் மாலை 5. 30 மணியளவில் பகண்டை கூட்ரோட்டில் நடராஜன் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த வி. சி. , ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், தனது கட்சியில் இணையுமாறு நடராஜனிடம் தெரிவித்துள்ளார். உடன் அங்கிருந்த வி. சி. , நிர்வாகிகள் இருவர், நடராஜன் வந்தால் நமது கட்சிக்கு தான் அசிங்கம் என தெரிவித்துள்ளனர்.


இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வி. சி. , நிர்வாகிகள் ராமராஜன், முனியப்பிள்ளை ஆகிய இருவரும் நடராஜனை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.


இது குறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில், பகண்டை போலீசார் வழக்கு பதிந்து, வி. சி. , நிர்வாகிகள் பெரியபகண்டையை சேர்ந்த ராமராஜன், 36; முனியப்பிள்ளை, 32; இருவரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி