நீர்த்தேக்க தொட்டி குழாய் உடைந்து நீர் சேதம்

54பார்த்தது
நீர்த்தேக்க தொட்டி குழாய் உடைந்து நீர் சேதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், கீழ்ப்பாடி கிராமத்தில் சுமாா் 3, 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் 3 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இவற்றில் திரெளபதி அம்மன் கோயில் அருகே உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் குழாய் சேதமடைந்துள்ளதால், தண்ணீா் அருவிபோல வெளியேறி சாலையில் பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு போதுமான குடிநீா் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தண்ணீா் சாலையில் பெருக்கெடுத்துச் செல்வதால், அந்தப் பகுதி சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதுகுறித்து ரிஷிவந்தியம் வட்டார வளா்ச்சி அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலங்களில் கிராம மக்கள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி