ரிஷிவந்தியம் அருகே வெங்கலம் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை கைது செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்கலம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் என்பவர் இருந்து வருகிறார்,
இவர் மீது கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமைப்பெண் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ரங்கநாதனுக்கு ஐந்து லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது,
பணத்தை திருப்பி கேட்டதற்கு ரங்கநாதன் தர மறுத்ததாகவும் எனவே அவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரில் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் இன்று காலை 4 மணி அளவில் ரங்கநாதனை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய கூறப்படுகிறது.
ரங்கநாதனுக்கு ஆதரவாக முனிவழை கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் செயல்பட்டதாகவும் அவர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறி இரண்டு கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும் நாங்களும் திமுகவைச் சேர்ந்த தலைவர் தான் என்றும் போலீசார் ஒழிக என்று கண்டன முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டதால் பேச்சு வார்த்தை நடத்திய திருக்கோவிலூர் ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்,
திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.