பகண்டைகூட்ரோடு: பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

53பார்த்தது
பகண்டைகூட்ரோடு: பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பகண்டைகூட்ரோடு கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் போக்சோ சட்டம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல் நல பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பகண்டைகூட்ரோட்டில் உள்ள கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, திருக்கோவிலுார் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமை தாங்கினார். சமூக குழந்தைகள் பாதுகாப்பு மாவட்ட அலுவலர் கவுரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வெரோணிக்காள் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், குழந்தை திருமணம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாத்து கொள்ளுதல், தவறான முறையில் அணுகும் நபர்கள் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தல், போக்சோ சட்ட விதிமுறை, போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்கமாக பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், சப்-இன்ஸ்பெக்டர் அமலா மற்றும் ஆசிரியர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி