மணலுார்பேட்டை அடுத்த அரும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் சுவேதா, 23; பி. எஸ். சி. , நர்சிங் முடித்துவிட்டு, சென்னையில், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த 22ம் தேதி தனது பாட்டி இறப்பு துக்க நிகழ்ச்சிக்காக மேலந்தல் கிராமத்திற்கு சென்று, பின் சென்னைக்கு திரும்பினார். மறுநாள் சுவேதாவிற்கு பெற்றோர்கள் போன் செய்தபோது எடுக்காத நிலையில், மருத்துவமனை மற்றும் உடன் பணியாற்றும் பணியாளரிடம் விசாரித்ததில், அவர் பணிக்கு வரவில்லை என தெரிய வந்தது. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தாய் புஷ்பலதா, 45; கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.