மணலூர்பேட்டை அருகே போலீஸ் சோதனையில் அபாயகரமான வெடிபொருட்களை எடுத்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மணலூர்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் நேற்று காலை 6: 30 மணி அள வில் தியாகதுருகம் திருவண்ணாமலை மெயின் ரோட்டில் ஜா. சித்தாமூர் அருகே வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக அதிவேகமாக சென்ற பைக்கை நிறுத்தி சோதனை இட்டபோது, அதில் எளிதில் வெடிக்க கூடிய அபாயகரமான வெடிபொரு ளான 101 ஜெலட்டின் குச்சி, 125 டெட்டர்னைட் டர், 10 எலக்ட்ரிக் டெட்டனெட்டர் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் வாணாபுரம் வெடி மருந்து குடோனில் இருந்து, கிணற்றுக்கு வெடி வைப்பதற்காக, செல்லங்குப்பத்தைச் சேர்ந்த குருசாமி மகன் சின்னதுரை, 38; ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ரமேஷ், 34; ஸ்ரீராமு மகன் கண்ணன், 44; எடுத்துச் சென்றது தெரிய வந்தது. அபாயகரமான வெடிப்பொருட்களை அஜாக் கிரதையாக கையாண்டது குறித்தும், எந்த விதமான அனுமதியும் இல்லாமல் வெடிப்பொருட்களை எடுத்துச்சென்றது குறித்து மணலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.