மணலுார்பேட்டை அடுத்த பள்ளிசந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி காயத்ரி, 21; கடந்த 26ம் தேதி இரவு கணவன், மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அய்யனார் தந்தை சுப்ரமணி, 57; தாய் லலிதா, 45; ஆகியோர் ஏன் என் மகனை தொந்தரவு செய்கிறாய் என கேட்டு திட்டினர். இதனால், விரக்தியடைந்த காயத்ரி, 27ம் தேதி காலை எலி பேஸ்ட் சாப்பிட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சுப்ரமணி, லலிதா ஆகியோர் மீது மணலுார்பேட்டை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.