சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை

63பார்த்தது
சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை
திருக்கோவிலுார் அடுத்த காட்டுச்செல்லுார் ரமணா பப்ளிக் பள்ளியில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

இப்பள்ளி மாணவர்கள் தஞ்சாவூரில், தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பங்கேற்று, நான்கு மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர். இவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் பாஸ்கரன் வரவேற்றார்.

கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம். எல். ஏ. , பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டி, பரிசு வழங்கினர். பள்ளி முதல்வர் உஷாகீதாபிரியா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி