கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கலையநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு சுகாதாரமற்ற கழிவறையால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளியின் கழிவறை சரி செய்து தர பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.