முதல்நாளே மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கிய தலைமை ஆசிரியர்

77பார்த்தது
முதல்நாளே மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கிய தலைமை ஆசிரியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 10ஆம் தேதியான இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை தந்தனர். இந்த நிலையில் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு தமிழக அரசின் நிலையில்லா நோட்டு புத்தகங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் காலாபன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இணைந்து வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி