விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் IPS அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாவட்டத்தில் உள்ள முக்கிய நிகழ்வுகள், நிலுவையில் உள்ள வழக்குகள், திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள், பழைய குற்றவாளிகள் செயல்பாடு, காவல் நிலையங்களில் அடிப்படை வசதிகள் தேவை ஆகியவை குறித்து எஸ் பி மோகன்ராஜ் அவர்களிடம் கேட்டறிந்தார்.