ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

348பார்த்தது
ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில்
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு தில்லை கோவிந்தராஜ பெருமாள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தில்லை கோவிந்தராஜ
பெருமாள், ஸ்ரீதேவி பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி