தியாகதுருகம் அருகே கோயில் உண்டியலை உடைத்து வெள்ளி நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தியாகதுருகம் அடுத்துள்ள புக்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று (ஜனவரி 9) காலை பூசாரி பார்த்திபன் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக தர்மகர்த்தா புகழ்வானனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்போயிருந்தது.
அதேபோல் கருவறை கதவை உடைத்து உள்ளே இருந்த அம்மனின் வெள்ளி கிரீடம் உட்பட 250 கிராம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் ஆகும். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் வழக்குப் பதிந்து கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.