கள்ளக்குறிச்சியில் ஊரக வளா்ச்சித்துறை தொழிலாளா்கள் போராட்டம்

65பார்த்தது
கள்ளக்குறிச்சியில் ஊரக வளா்ச்சித்துறை தொழிலாளா்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை திடல் அருகே தமிழ்நாடு எஐடியுசி ஊரக வளா்ச்சித்துறை தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீா் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மை காவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி, ஊதியம் வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம். ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் ஆ. வளா்மதி போராட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், ஊரக வளா்ச்சித்துறை தொழிலாளா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்ட பொதுச் செயலா் அ. சௌரிராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி