கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் ஊராட்சி
நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் ரூ. 25 லட்சத்து
50 ஆயிரம் மதிப்பில் புதிதாக 2 வகுப்பறைகள்
கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
கட்டிடம் கட்டப்பட்டது. தொடர்ந்து இதன் திறப்பு
விழா நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார்
தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள்
வசந்தம். கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை
அமைச்சர் எ. வ. வேலு கலந்து கொண்டு புதிய
பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு
ஏற்றினார்.