கள்ளக்குறிச்சியில் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

70பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை 10ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை 30 நாட்களுக்கு நடக்கிறது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 57 தடுப்பூசிப் போடும் குழுக்களின் மூலம் தேசிய விலங்கின நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் வாயிலாக 100 சதவீத இலக்கு அடைந்திடும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் நிதி உதவியுடன் நாளை 10ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் இத்தடுப்பூசித் திட்டத்திற்கு கால்நடை வளர்ப்பு விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும்.

முகாம் வரும் ஜூலை 10ம் தேதி வரை 30 நாட்களுக்கு நடைபெறும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி