கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூரில் இருக்கும் ஆக்சாலிஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் இன்று (ஜூலை 28) பண்ருட்டியில் நடைபெற்ற ராயல் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று சிறந்த குழுவிற்கான பட்டத்தை பெற்று உலக சாதனை புரிந்தனர். மாணவர்கள் உலக சாதனை புரிய முக்கிய காரணமாக பயிற்சியாளர் கமல்ஹாசன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் மாணவர்களை உத்வேகப்படுத்தினர்.