கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குநர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சசிகலா வரவேற்றார். விழாவில், கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.