கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டுக்கான சேர்க்கை கலந்தாய்வு அவகாசம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் தகவல்களுக்கு 9944618626, 9442867335, 9488385638 ஆகிய எண்ணை தொடர்பு கொள்ளலாம்.