கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத்சதுர்வேதி உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ரமேஷ், பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வு டி.எஸ்.பி. ஜெயக்குமார் மேற்பார்வையில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு, சைபர் கிரைம் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு போலீஸ் சார்பில் நாட்டுப்புறக் கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.