கள்ளக்குறிச்சி நகராட்சியை துாய்மையாக பராமரிப்பதற்கான துாய்மை இயக்கம் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆணையர் சரவணன் தலைமை தாங்கினார். பொறியாளர் பிரபாகரன், துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் சையத் காதர் வரவேற்றார். நகரப்பகுதியை சேர்ந்த வணிக அமைப்பினர் பங்கேற்றனர். கூட்டத்தில், துாய்மை இயக்க திட்டம் சார்பில் அனைத்து இடங்களையும் குப்பைகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதியை துாய்மையாக வைத்திருக்க தங்களால் முயன்ற உதவிகளை செய்திட வேண்டும் என ஆணையர் அறிவுறுத்தினார்.
அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார், எப். எஸ். எஸ். , அறக்கட்டளை தலைவர் பெருமாள், ஜெயலட்சுமி ஓட்டல் உரிமையாளர் கோவிந்தன், கவுன்சிலர்கள் சீனுவாசன், செல்வம், உமா வெங்கடேசன், மீனாட்சி கேசவன், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.