கள்ளக்குறிச்சி: அரசு கல்லுாரியில் வேதியியல் மன்றம் துவக்கம்

78பார்த்தது
கள்ளக்குறிச்சி: அரசு கல்லுாரியில் வேதியியல் மன்றம் துவக்கம்
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறையின் மன்ற விழா மற்றும் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபச்சார விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் தர்மராஜா முன்னிலை வகித்தார். மாணவர் காமராசு வரவேற்றார். டாக்டர் ஆர். கே. எஸ் கல்லூரி வேதியியல் துறை தலைவர் அகமது சுல்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்வில் வேதியியலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

தொடர்புடைய செய்தி