கள்ளக்குறிச்சி: முன்விரோத தகராறு: 3 பேர் மீது வழக்கு

79பார்த்தது
கள்ளக்குறிச்சி அடுத்த எஸ். ஒகையூர் சேர்ந்தவர் ஆறுமுகம், 47; அதே ஊரைச் சேர்ந்தவர் முனியப்பிள்ளை, 47; இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. கடந்த 28 ம் தேதி ஆறுமுகம், அவரது மனைவியும் மாடு மேய்த்தபோது முனியப்பிள்ளை, இவரது தம்பி வெங்கடேசன், 42; ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அதேபோல் ஆறுமுகம் திட்டி தாக்கியுள்ளார்.


இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் முனியப்பிள்ளை, வெங்கடேசன் மற்றொரு தரப்பில் ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி