சின்னசேலம் அருகே கோளக்காட்டில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்து 6 நாட்களுக்குப் பின்னர் குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் இருந்த குமரேசன், சோளக்காட்டில் வைத்து இளம்பெண்ணை கற்பழித்துக் கொலை செய்துள்ளார். 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது குமரேசனை கைது செய்துள்ளனர்.